Advertisement

ஸ்பெஷல் பிரைடல் மேக்கப்

அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது பெண்களின் இயல்பு. பெண்களின் அழகிற்காக தனி உலகமே இயங்குவதால் அழகியல் துறையில் நவீனங்கள் இன்று பிரபலமாகி வருகிறது.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி அழகியல் கலைஞர் சுவஸ்திகா கூறியதாவது:
''அம்மா உமா பியூட்டீஷியன். எனக்கும் அழகியல் துறையில் தனி ஆர்வம் உண்டு. அதனால் நானும் அழகியல் முறைகளை கற்றுக் கொண்டேன். மணப்பெண் மேக்கப் செய்வதில் நாங்கள் தனி கவனம் செலுத்துகிறோம்.
பவுண்டேஷன் மேக்கப்பில் துவங்கி ஜடை அலங்காரம் வரை ஸ்பெஷல் பிரைடல் மேக்கப் செய்கிறோம்.
மணப்பெண் எப்படி ஆடை அணிந்தால் போட்டோவிற்கு அழகாக தெரிவார் என்றும் ஆலோசனை தருகிறோம். இதோடு மாடலிங், விளம்பரம், குறும்படங்களில் நடிக்கும் பெண்களுக்கும் மேக்கப் செய்கிறோம்.
இன்றைய பெண்கள் பெரிய கம்மல் அணிவதை விரும்புகிறார்கள்.
இப்படி அணியும் போது காது ஓட்டை பெரிதாகி 'கட்'டாகி புண்ணாகும். இதற்கு அறுவை சிகிச்சையின்றி காதுகளை ஒட்டுவதற்கு வழிகாட்டுகிறோம். 'கட்'டான காது மடல்களில் 'பேஸ்ட்' போன்ற சில பொருட்களை வைத்து ஒட்டி மூடுகிறோம். சில நாட்கள் இம்முறையை பின்பற்றினால் காது பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்'' என்றார்.
- நீங்களும் அழகாக 99650 41745.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement