Advertisement

சொர்ண மசூரி ரக நெல்லில் ஜொலிக்கலாம்

சொர்ண மசூரி நெல் சாகுபடி குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:


பாரம்பரிய ரக நெல்லில், சொர்ண மசூரி ரகமும் ஒன்று. இது, 130 நாள் விளையக்கூடிய ரகமாகும்.ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ விதைகளை, ஒரு கோணி சாக்கில் கட்டி, நீரில் ஊறவைக்க வேண்டும். பின், முளை கட்டிய நெல் மணிகளை, நன்கு உழுவப்பட்ட நிலத்தில், 'டிரம் ஷிடர்' என்ற கருவி மூலமாக, நேரடி விதைப்பு செய்ய வேண்டும்.

இயற்கை உரம் மற்றும் நீர் பாசனத்தை சிக்கனமாக கடைப்பிடித்தால், வழக்கமான மகசூலை காட்டிலும் கூடுதலாக எடுக்கலாம். இயற்கை விவசாயத்தில், 1 ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 20 மூட்டை நெல்லை அறுவடை செய்யலாம். சொர்ண மசூரி ரகத்தில், 30 மூட்டை செய்யலாம். அரிசியாக மாற்றி விற்பனை செய்தாலும், விதை நெல்லாக பதப்படுத்தி விற்பனை செய்தாலும், 1.20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம். ஆண்டுக்கு இரு பருவம் செய்தால்போதும், 2.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement