Advertisement

வங்கியில் 300 காலியிடங்கள்

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் 300 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: உதவியாளர் 291, இளநிலை உதவியாளர் 9 என 300 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் மற்றும் கூட்டுறவு பயிற்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.1.2019 அன்று 18 வயது முடித்திருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். ஏற்கனவே 23.10.2019 - 22.11.2019 வரை விண்ணப்பித்தவர்கள், கண்டிப்பாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250. எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. ஏற்கனவே 23.10.2019 - 22.11.2019 வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

எழுத்து தேர்வு: 1.3.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.2.2020

விபரங்களுக்கு
: www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement