Advertisement

பி.எப்., நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் (இ.பி.எப்.ஓ.,), 'என்போர்ஸ்மென்ட் ஆபிசர்/ அக்கவுண்ட்ஸ் ஆபிசர்' பிரிவில் 421 காலியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தவிர சட்டம், எம்.பி.ஏ., படிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை மட்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.1.2020

விபரங்களுக்கு
: www.upsc.gov.in/sites/default/files/SplAdvt-51-2020-Engl.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement