Advertisement

அழகான அலங்கார சிலைகள்

கலைகளில் சிறந்த கலை சுவாமி அலங்கார கலை என்றால் அது மிகையல்ல. அதனால் தான் பெண்களில் சிலர் அலங்கார சுவாமி சிலைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மதுரை கரிமேடு கிராப்ட் கலைஞர் தமிழ்ச்செல்வி பேசுகிறார்...

''தினமும் இறை சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் 20 ஆண்டுகளாக சுவாமி சிலை அலங்காரம் செய்கிறேன். என் குடும்பம் ஒத்துழைப்பு வழங்கி இன்று வரை என்னை கலை பாதையில் பயணிக்க செய்துள்ளது.

திருப்பதி, அலமேலு சிலைகளை மட்டும் ஒருவித மாவு வைத்து 'மோல்டு' சிலையாக செய்கிறேன். லட்சுமி, விநாயகர், பெருமாள், முருகன், கண்ணன், ராதை போன்ற சுவாமிகளை துணிகளால் உருவாக்குகிறேன். மரப்பாச்சி பொம்மைகளை ஜொலிக்கும் டிசைனர் கற்களை கொண்டு அலங்கரிக்கிறேன். கொலு தவிர பிற நாட்களில் கூட பூஜையில் அலங்கார சுவாமி சிலைகளை வைத்து வழிபடலாம்.

ரெடிமேட் கோலங்களும் விரும்பிய வடிவங்களில் செய்து தருகிறேன். இக்கோலத்தை தேவையான இடத்தில் வைத்து விட்டு பின் எடுத்து விடலாம். கோலத்திற்கு நடுவில் விளக்கு வைக்க இடம் கொடுத்துள்ளேன். கல்யாண வீடுகளை அலங்கரிக்கும் ஆரத்தி தட்டு, கும்பம், பொம்மைகள் என விழாக்களை சிறப்பிக்கும் அனைத்து பொம்மைகளையும் செய்கிறேன்'' என்றார்.

- பொம்மைகள் வாங்க 94420 33161.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement