Advertisement

'டீசல்' ஓ.எஸ்., ஸ்மார்ட் வாட்ச்

Share

அமெரிக்காவில் இம்மாதம், 7-10ம் தேதிகளில் நடைபெற்ற, 'கேட்ஜெட்' உலகின் திருவிழாவான, நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்தன.

'பாஸில்' குழுமத்தின் துணை பிராண்டான, 'டீசல்' கண்காட்சியில், புதிய ஓ.எஸ்., ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

இந்த, 'டீசல் ஆன் பேட்லைட்' ஸ்மார்ட் வாட்சில், புதிதாக எந்த கவர்ச்சிகரமான மென்பொருள் அம்சங்களோ அல்லது வன்பொருளோ இல்லை என்கின்றனர்.

ஆனால், ஒரு ஏரியா நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். அது, தயாரிப்பு தரம் மற்றும் வடிவமைப்பு. இந்த வாட்சில், ஒளிபுகும் வகையிலான நைலான் கேஸிங் உள்ளது.

கூடவே அதற்கேற்ப பல வண்ணங்களில், 'டிரான்ஸ்பெரன்ட் ஸ்ட்ராப்'களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விட்டம், 43 மில்லி மீட்டர் கொண்ட இந்த வாட்ச், நான்கு வண்ணங்களில் வந்துள்ளது. இதில் இன்னொரு வசதி, இந்த வாட்ச் இருபாலருக்கும் ஏற்றதாகும்.

இதன் விலை தோராயமாக, இந்திய மதிப்பில், 20 ஆயிரம் ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement