Advertisement

அடம் பிடிப்போம்

ஒரு விஷயம் வேணுமின்னா ஆசைப்பட்டா மட்டும் போதாது; அடம் பிடிக்கத் தெரியணும்!

எப்படி... எப்படி... உங்க அக்கா தங்கச்சி வந்தா மட்டும், ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போவீங்க. அதே, என் அப்பா, அம்மா வந்தா நானே சமைச்சு கொட்டணுமா; முடியாது... நாளைக்கு என்னால சமைக்கவே முடியாது. உங்க ஆசை தொங்கச்சி வந்தப்போ, ஏதோ ஒரு ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்து, 'அது நல்லா இருந்துச்சாடா... இது ருசியா இருந்துச்சாடா'ன்னு பாசத்துல வழுக்குனீங்களே... எங்களை அங்கே கூட்டிட்டுப் போறீங்க; அவ்வளவுதான்!

நாள் : மறுநாள்
நேரம் : 12:30 மணி
இடம் : மருத்துவ கல்லுாரி சாலை,
செல்லம்மாள் மண்பானை சமையல் உணவகம்,
தஞ்சாவூர்.

அட... அட... அட... வீடு மாதிரி ஓட்டல், வாசல்ல ஒரு மாட்டு வண்டி, உட்கார்ந்து பேச திண்ணை, கீற்றுக் கூரை, பிரம்பு மேஜை நாற்காலி, மின்விளக்குல இருந்து லேசான மஞ்சள் வெளிச்சம்... ரம்மியமா இருக்குதுல்லப்பா! அவரு எப்பவுமே இப்படித்தான்... வெளியிலேன்னு கூட்டிட்டு வந்துட்டா, இப்படித்தான் ஏதாவது ஆச்சர்யப்படுத்திட்டே இருப்பாரு. ஏங்க... சூப்பர்ங்க! சரி... சரி... என்ன சூப் ஆர்டர் பண்ணலாம்?

நேரம் : மாலை 4:00 மணி
சாப்பிடுற சூழல் இவ்வளவு அமைதியாவா... அருமை... அருமை; நல்ல திருப்தியான சாப்பாடுடி! வரவேற்கிறதுல இருந்து உணவு பரிமாறி பணம் வாங்குறது வரைக்கும் எல்லாமே பெண்கள்ங்கிறது ஆச்சர்யம்!
ஆமாம்மா... நம்ம கண்ணுக்கு முன்னாடியே செக்குல எண்ணெய் ஆட்டி, விறகடுப்புல மண் பானை சமையல் பண்றதெல்லாம் ஆச்சர்யம்! குதிரைவாலி சோறு, முடக்கத்தான்/ மணத்தக்காளி/ துாதுவளை சூப், 5 வகை கீரை, 5 வகை பொரியல், விதவிதமா சாம்பார், ரசம், கூட்டு...
இதெல்லாத்தையும் விட, என்ன சாப்பிட்டோமோ அதுக்கு மட்டும் பணம்னு சொன்னாங்க பாரு, அதான் ஹைலைட்!
அம்மாடி... அடுத்த தடவை வர்றப்போ, அந்த 250 ரூபாய் 'புபே'வையும் சாப்பிட்டு பார்த்துடணும்!கண்டிப்பாம்மா; இப்பவே அவர்கிட்டே சொல்லிடுறேன்!
அதெல்லாம் இருக்கட்டும்டி; அந்த மாட்டு வண்டி பக்கமா, மாப்பிள்ளைகிட்டே என்னவோ காதை கடிச்சிட்டு இருந்தியே... என்னடி சொன்னே?
அதுவா...
தாயை நல்லா பார்த்துக்கிட்டா வாழ்ந்த பின் சொர்க்கம்; மனைவியை நல்லா பார்த்துக்கிட்டா வாழும் போதே சொர்க்கம்!
செல்லம்மாள் சிறப்பு உணவுகள்
வாழைப்பூ கோலா - ரூ. 15
முள்ளங்கி புளிக்குழம்பு - ரூ. 15
பாகற்காய் வறுவல் - ரூ. 20
வரகு அவல் பாயசம் - ரூ. 15
உணவக நேரம்: மதியம் 12:30 - 3:30 மணி
போன்: 73050 66866

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement