Advertisement

கோழி வளர்ப்பில் குடிநீர் பராமரிப்பு

மிக முக்கியமான உணவு பொருட்களில் கோழிகளுக்கு தேவையானது குடிநீர். குடிநீரும் ஒரு உணவு பொருள் தான். கோழிகளால் சில நாட்களில் கூட தண்ணீரின்றி உயிர் வாழ முடியாது. இறைச்சி கோழிகள் தாங்கள் சாப்பிடும் தீவனத்தை போல் இரண்டரை மடங்கு எடுத்து கொள்கின்றன. முட்டை கோழிகளை பொறுத்தமட்டில் முட்டையிட்ட பிறகும், இரவில் விளக்குகளை அணைப்பதற்கு முன்னதாகவும், அதிகளவு தண்ணீர் குடிக்கும். காலையில் சூரிய ஒளி பட்டதும் அதிகளவு தண்ணீர் அவை பயன்படுத்துகின்றன. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கோடையில் ஏற்படும் கூடுதலான வெப்பத்தை சுவாசக் காற்று மூலம் வெளியேற்றுகின்றன.

இதனோடு சேர்ந்து தண்ணீரும் ஓரளவு வெளியேறுகிறது. கோழிகளுக்கு ரத்தக்கழிச்சல், சால்மனெல்லோசிஸ், கோலிபேசில்லோசிஸ் போன்ற நோய்கள் தண்ணீர் வழி பரவுகிறது. இதனால் சுத்தமான குடிநீரை வழங்குவது அவசியம். கூண்டு முறையில் வளரும் கோழிகளுக்கு நிப்பிள் வகை தண்ணீர் தரும் அமைப்பை பயன்படுத்தும் பொது, இதில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வகை அமைப்புகள் மாசுபடாத குடிநீரை கோழிகளுக்கு தருவதில் பங்காற்றுகின்றன. நிப்பிள் முறை தண்ணீர் வழங்கும் போது அவை கோழிகளை விட உயரத்தில் இருக்குமாறு அமைத்து கொள்வது நல்லது. இதனால் கோழிகள் தலையை நீட்டியவாறு தண்ணீர் குடிக்க ஏதுவாக இருக்கும்.

- டாக்டர். வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
94864 69044

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement