Advertisement

'பானாசோனிக்' டிவி மற்றும் ஒயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

Share

அமெரிக்காவில் இம்மாதம், 7-10ம் தேதிகளில் நடைபெற்ற, 'கேட்ஜெட்' உலகின் திருவிழாவான, நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்தன.

இதில் 'பானாசோனிக்' நிறுவனமும், இந்த கண்காட்சியில், 'டிவி' ஒன்றையும், 'ஒயர்லெஸ்' இயர்போனையும் அறிமுகம் செய்துள்ளது.

'பானாசோனிக் எச்.இசட்., 2000 ஓ.எல்.இ.டி., டிவி' டால்பி விஷன் ஐகியூ மற்றும் பிலிம்மேக்கர் மோடு ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டுமே சினிமாவை தரமாக பார்க்க உதவும் தொழில்நுட்பங்களாகும். குறிப்பாக, டால்பி விஷன் ஐகியூ, டால்பி விஷனிலிருந்து மேம்படுத்தப்பட்ட ஒன்றாகும். அறையில் உள்ள விளக்குகளின் வெளிச்சத்தை பொறுத்து, 'டிவி'யே அதன் ஒளி அமைப்பை மாற்றி அமைத்து, படங்களை சிறப்பாக காட்டும்.

பானாசோனிக் ஆர்.இசட்.எஸ்., 500 டபுள்யூ ஒயர்லெஸ் இயர்போன், ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement