Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* 'பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துறது குற்றம்; இந்த குற்றம் நிகழ்ந்தா, சம்பந்தப்பட்டவங்க தான் அதற்குரிய இழப்பீட்டை தரணும்!'னு அரசு முடிவெடுக்கிறது அருமையான விஷயம். இதேமாதிரி, அரசு நிர்வாக அலட்சியத்தால பொதுமக்கள் உயிர் இழந்தா, அதுக்கு நிவாரணமா மக்கள் பணத்துல கை வைக்கிறதை தவிர்த்து, அந்த விபத்துக்கு காரணமான துறை அலுவலர்கள், அதிகாரிகள், அமைச்சர், முதலமைச்சரோட ஊதியத்துல பிடித்தம் பண்றது தானே நியாயம்!

* கலப்பட சுகாதாரமற்ற உணவுகள் தொடர்பா கடந்த மூன்று ஆண்டுகள்ல, 12 ஆயிரம் புகார்கள் வந்திருக்குன்னும், புகார் தொடர்பா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குன்னும் சொல்ற உணவு பாதுகாப்பு துறை, அப்படி நடவடிக்கைக்கு உள்ளான உணவகங்களோட பெயர்களை வெளியிட ஏன் தயங்குது; மக்கள் ஆரோக்கியத்துல அவ்வளவு தான் அக்கறையா; அப்போ... கலப்படம் உணவுல மட்டுமில்ல!

* 'ஒவ்வொரு வருஷமும் அரசுகிட்டே பொங்கல் பரிசு வாங்கித்தான் பொங்கல் கொண்டாட முடியும்'ங்கிற சூழலோட மக்கள் வாழ்றது, ஆட்சி நடத்துற அரசுக்கான பெருமையா! அதோட, என் காசை வெவ்வேறு வழிகள்ல வாங்கி, அதுல கொஞ்சத்தை பிய்ச்சு தர்றது எப்படி பரிசாகும்!
ம்ம்ம்... ரெண்டு அரை கிலோ அல்வா வாங்கின மாதிரியே பீலிங்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement