Load Image
Advertisement

'வேம்பு'

கால்நடைகள் உடல் நலம் குன்றும்போது பெரும்பாலான விவசாயிகள் முன்னோர் மூலிகை மருத்துவத்தை பின்பற்றினர். மருத்துவ வசதி இல்லாத ஊர்கள், மலை பகுதிகளில் வாழ்பவர்கள் மூலிகை மருத்துவம், தங்கள் ஊரில் கிடைக்கும் தாவரங்களை கொண்டு செலவில்லாமல் முதலுதவி செய்தனர். இந்தியா, சீனா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாட்டினர் மூலிகை மருத்துவத்தை அதிகமாக பின்பற்றி வருகின்றனர். மூலிகை மருத்துவத்தில் முதலிடம் வகிப்பது வேம்பு. 200 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும் வேப்ப மரம் இந்தியா, பர்மா, இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலும் பரவலாக வளர்கிறது.
இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவங்களில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பயன்பாட்டிலிருக்கும் ஒரு மூலிகை வேம்பு மட்டுமே.

சமஸ்கிருத மொழியில் வேம்பு 'அரிஸ்தா' என வழங்கப்படுகிறது. அரிஸ்தா என்றால் 'நோயிலிருந்து விடுதலை அளிப்பவர்' என்று பொருள். 'சர்வரோக நிவாரணி' என்றும் கூறுவர். 1992ல் ஆண்டு அமெரிக்க நாட்டின் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் வேப்பமர இலை, காய், பூ, பழம், விதை, பட்டை, பிசின், வேர், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பாகங்களிலிருந்தும் சுமார் 13 வேதியியல் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வேப்ப மரத்தின் தாக்கம் 500 வகையான பூச்சிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. வேப்ப மருந்துகளை தெளிக்கும் போது அப்பூச்சிகள் உணவு உட்கொள்ளாமல் வளர்ச்சி குன்றி இறந்து விடுகின்றன. பூச்சிகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்காமல் அழிந்து விடுகின்றன.
விவசாயத்தில் முக்கியமான இயற்கை விவசாயத்தில் ஒரு நல்ல பூச்சிக்கொல்லி மருந்தாகவும், எருவாகவும், மரப் பொருள்கள் உபயோகமாகின்றன.
- எம். ஞானசேகர்
வேளாண் ஆலோசகர், சென்னை
95662 53929



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement