Advertisement

வேட்டை நாய்க்கு, வெள்ளை மாளிகையில் விருந்து!

Share

சிரியாவில், ஐ.எஸ்., தீவிரவாதத்தை ஒடுக்கும் சவாலான பணியில், அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில், ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் தலைவரான, அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவின் வடமேற்கு பகுதியில், ரகசியமான ஒரு இடத்தில், பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அல் பாக்தாதியின் மறைவிடத்தில், நேரடியாக, அமெரிக்க ராணுவம் அதிரடி தாக் குதல் நடத்தியதும், ஒரு சுரங்கப் பாதை வழியாக, தப்பி ஓட முயற்சித்தான்.
அவன், சுரங்கப் பாதையில் நுழைந்து, ஓடத் துவங்கியதை கவனித்த, அமெரிக்க ராணுவம், தங்கள், 'டெல்டா போர்ஸ்' படையை சேர்ந்த, 'கேனோன்' என்ற வேட்டை நாயை, அல் பாக்தாதி மீது ஏவி விட்டது.
அமெரிக்க ராணுவ வேட்டை நாய், சுரங்கப் பாதைக்குள் தன்னை துரத்தி வருவதை கவனித்த, அல் பாக்தாதி, இன்னும் வேகமாக ஓடத் துவங்கினான்.
ஆனால், அவனது துரதிர்ஷ்டம், தப்பிக்க வழி இல்லாமல், சுரங்கப் பாதை அடைக்கப்பட்டிருந்தது. பாய்ந்து ஓடி வரும் ராணுவ வேட்டை நாயிடமோ, அமெரிக்க ராணுவத்திடமோ சிக்க விரும்பாத அல் பாக்தாதி, தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து, மரணமடைந்தான்.
அப்போது, சிதறிய வெடிகுண்டின் ஒரு துண்டு, ராணுவ வேட்டை நாய், 'கேனோனின்' மீது பட்டு, காயப்படுத்தியது.
அமெரிக்க ராணுவத்தினர், துரிதமாக செயல்பட்டு, நாய்க்கு சிகிச்சை அளித்து, காப்பாற்றினர்.
ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்தின் தலைவன், அல் பாக்தாதியின் மரணம், டி.என்.ஏ., பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் குணமடைந்து, அமெரிக்காவுக்கு திரும்பிய ராணுவ வேட்டை நாய், வெள்ளை மாளிகைக்கு, சிறப்பு விருந்தினராக சென்றது.
ராணுவ நாய், 'கேனோனு'க்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், விருந்தளித்து கவுரவித்துள்ளார்.
கொடுத்து வைத்த நாய்!

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement