Advertisement

உள்ளாட்சி தேர்தல்; விலைக்கு போகப் போகிறீர்களா?

தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது; இந்த கதையை படித்த பிறகு முடிவெடுங்கள்:
ஒரு அரசியல்வாதி, முதியவர் ஒருவரிடம், 1,000 ரூபாய் கொடுத்து, 'எனக்கு ஓட்டளிக்க வேண்டும்...' என்றார்.
'எனக்கு பணமெல்லாம் வேண்டாம்; ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும்...' என்றார், முதியவர்.
அரசியல்வாதியும் எங்கெல்லாமோ தேடி பார்த்தார்; 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கழுதையே கிடைக்கவில்லை.
முதியவரிடம், '10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கழுதையே கிடைக்கவில்லை...' என்றார்.
'என் மதிப்பு, கழுதைய விட குறைவா... ஆகையால், நான், என் ஓட்டை விற்க மாட்டேன்...' என்றார், முதியவர்.
இன்றைய சந்தை மதிப்பு விபரம் :
ஒரு எருமையின் விலை - - 80 ஆயிரம் ரூபாய்; பசு மாடு -- 50 ஆயிரம்; ஆடு -- 10 ஆயிரம்; நாய் - 5,000 முதல் 6,000 ரூபாய் வரை; பன்றி -- 3,000 முதல் 5,000 ரூபாய் வரை.
தேர்தலின்போது, தன்னை விற்கிற நபரின் விலை மட்டும், 500 முதல் 1,000 ரூபாய்.
இது, ஒரு பன்றியின் விலையை விட மிகவும் குறைவு. யோசித்து, கவுரவத்துடன் ஓட்டளிப்பீர்கள் தானே!
ஜோல்னா பையன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement