Advertisement

அமேசானின் புதிய, 'ஸ்பீக்கர்'

'அமேசான்' நிறுவனம், 'எக்கோ ஸ்பீக்கர்' வரிசையில் புதிதாக, 'எக்கோ இன்புட் போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை' இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன் அறிமுகமான ஸ்பீக்கர்களிலிருந்து, இது சற்று வேறுபட்டது. மற்றவற்றில் பேட்டரி கிடையாது. இது, 'பேட்டரி'யுடன் வந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
அதனால், இதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம். மற்ற ஸ்பீக்கர்கள், 'பிளக் பாயின்ட்' இணைப்பிலேயே இருக்க வேண்டும். இந்த ஸ்பீக்கர், இந்திய வாடிக்கையாளர்கள் விருப்பத்தை ஏற்று, அதன்படி தயாரிக்கப்பட்டு உள்ளது.
'இந்திய வாடிக்கையாளர்கள், 'அலெக்ஸா'வை பயன்படுத்துவதில் மிகவும் விருப்பமாக இருக்கின்றனர். ஆனால், ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஒரு அறையிலிருந்து, இன்னொரு அறைக்கு எடுத்துச் செல்வதில் சிரமமாக இருப்பதாக எங்களுக்கு தெரிவித்தனர்.
'இதையடுத்து, பில்ட் இன் பேட்டரியுடன், இந்த ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளோம்' என, அமேசான் இந்தியாவின் தலைவர் பராக் குப்தா தெரிவித்துள்ளார்.
மற்றபடி இது எக்கோ டாட் போன்றது. இதில் உள்ள பேட்டரி, 4,800 எம்.ஏ.எச்., திறன் கொண்டது.
விலை: ரூ.4,999

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement