Advertisement

கலப்பின ஆடு வளர்ப்பு கல்லா கட்டலாம்

கலப்பின ஆடு வளர்ப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், போந்துார் கிராமத்தைச் சேர்ந்த என்.எம். முகமது அபு பெர்னாஸ் கூறியதாவது:நான், கொட்டகையில் பரண் அமைத்து, போயர் மற்றும் தலைச்சேரி ரக கலப்பின ஆடுகளை வளர்த்து வருகிறேன். பொதுவாக, ஓர் இனத்தைச் சேர்ந்த ஆடுகளை வளர்க்கும் போது, பிறக்கும் ஆட்டுக்குட்டியின் எடை, 2 கிலோ வரை இருக்கும்.போயர் மற்றும் தலைச்சேரி கலப்பின ஆட்டில் பிறக்கும் ஆட்டுக்குட்டி, 3 கிலோ வரை எடை இருக்கும்.ஒரு நாட்டு ஆடு வளர்க்கும் போது, ஓராண்டுக்கு, 25 கிலோ வரை எடை கிடைக்கும். போயர் மற்றும் தலைச்சேரி கலப்பின ஆடுகளில், 75 முதல், 85 கிலோ வரை இருக்கும்.எடை கூடும் போது, நமக்கு வருவாய் கூடும். 100 கலப்பின ஆடுகளை வளர்க்கும்போது, இரண்டு ஆண்டுகளில், 9 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99626 32904

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nallavan -

    makkaluku nallatha illaya nu parunga... nalla Labam sambarika mudiyumanu Mattum paakathinga

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement