Advertisement

கை செலவுக்கு கை கொடுக்கும் கத்தரி

கத்தரிக்காய் சாகுபடி குறித்து, உத்திரமேரூர் அடுத்த வெங்கோடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பி.ஜம்பு கூறியதாவது:பென்னலுாரில் கரும்பு, வேர்க்கடலை, நெல் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளேன். கரும்பில் வருவாய் கிடைக்க, ஓராண்டாகும்.நெல்லுக்கு, 4 முதல், 6 மாதங்களும், வேர்க்கடலைக்கு, நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும். இவற்றில் மொத்தமாக வருவாய் பார்த்தாலும், ஒரே ஒருமுறை மட்டுமே வருவாய் கிடைக்கும். அந்த தொகை, வங்கிக்கடன், வாகன கடன் செலுத்துவதற்கு போதுமானதாக உள்ளது.அன்றாட கை செலவுக்கு கை கொடுப்பது கத்தரிக்காய், வெண்டை, அவரை போன்ற தோட்ட பயிர்களே. இதனால், 'உஜாலா' ரக கத்தரிக்காய் பயிரிட்டுள்ளேன். ஆடி மாதம் செடி நடவு செய்தேன். 20 நாட்களாக, ஒருநாள் விட்டு ஒருநாள், கத்தரிக்காய் பறித்து வருகிறேன்.சீசனுக்கேற்ப மொத்த விலையில் கிலோ, 15 - 50 ரூபாய் வரை சந்தையில் விலை போகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement