Advertisement

கறுப்பு கவுனி நெல்லுக்கு, 'மவுசு'

கறுப்பு கவுனி நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.குமரேசன் கூறியதாவது:பாரம்பரிய நெல் சாகுபடியில், கறுப்பு கவுனி நெல்லுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. மருத்துவக் குணம் உடையது; குறிப்பாக, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த உணவாக இருப்பதால், கறுப்பு கவுனி அரிசிக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.நான், 50 சென்ட் நிலத்தில், கறுப்பு கவுனி ரக நெல்லை, ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்துள்ளேன். ஆறு மாதங்களில், மகசூல் நன்றாக வந்துள்ளது. அரிசியாக விற்பனை செய்தால், 75 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பார்க்கலாம். அரிசி மாவாக அரைத்து விற்பனை செய்தால், இரட்டிப்பு வருவாய் பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 96779 55465

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement