Advertisement

பிளஸ் 2 படிப்புக்கு மத்திய அரசு வேலை

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) சி.எச்.எஸ்.எல்., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம்: கிளார்க், ஜூனியர் செயலக அசிஸ்டென்ட், போஸ்டல் அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன. எத்தனை பணியிடங்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

வயது: 1.1.2020 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.1.1993 - 1.1.2002க்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: பிளஸ் 2. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு பிளஸ் 2 (கணிதம், இயற்பியல், வேதியியல்) முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : டையர் 1, டையர் 2 என இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்
: ரூ. 100. பெண்கள், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.1.2020

விபரங்களுக்கு : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_03122019.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement