LOGIN
dinamalar telegram
Advertisement

'சயோமி'யின் '3 இன் 1'

Share

'சயோமி' நிறுவனம், பல வகைகளில் பயன்படும் சாதனம் ஒன்றை, சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை, விளக்கு, 'பிளாஷ் லைட், பவர் பேங்க்' என, மூன்று விதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த, '3 இன் 1' சாதனம், 2,600 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரியுடன் வந்துள்ளது.
இந்த சாதனத்தில் உள்ள விளக்கு, அருகில் யாராவது இருந்தால் நன்றாக எரியும்; ஆள் இல்லையெனில், தானாகவே அணைந்து விடும். இதற்காக தனியாக சென்ஸார் ஒன்று இதில் உள்ளது. 9 அடி துாரம் வரை ஆளிருப்பதை இந்த சென்ஸார் அறிந்து கொள்ளும்.
இதை விளக்காகவும், பிளாஷ் லைட்டாகவும் பயன்படுத்த முடியும் என்பதோடு, மொபைல் போனை சார்ஜ் செய்ய, பவர் பேங்க் ஆகவும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: ரூ.1,200

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement