Advertisement

ரவுத்திர வீணை!

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

திறமையான நிர்வாகம்ங்கிறது தற்காலிக தீர்வை செயல்படுத்துறதா; நிரந்தர தீர்வை சிந்திக்கிறதா?
இந்த ஆண்டுல மட்டும் மேட்டூர் அணை நாலு தடவை நிரம்பியிருக்கு! அணையை ஒட்டி எங்க கிராமம் இருக்குன்னு பேரு; ஆனா, அணையைக் காட்டிலும் மேடான இடம்ங்கிறதால எங்களுக்கு எப்பவுமே தண்ணீர் வராது. இத்தனைக்கும், எங்க கிராமத்தை ஒட்டி தான் அணைக்கு தண்ணீர் போகுது. அரசு நினைச்சா, அந்த நீரை எங்க ஊருக்கு கொண்டு வரலாம்.
இதுக்காகத் தான், 'தோனிமடுவு' திட்டத்தை தயார் பண்ணினோம். மேற்குதொடர்ச்சி மலையில இருந்து வர்ற ஓடை தண்ணீர் பாலாறு, காவிரியில கலந்து அணைக்கு போகுது. அப்படி போற நீரை, வனவிலங்குகள் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருக்கிற அகழியில பாய வைக்க முடியும். அதுக்கு தேவை, 'தோனிமடுவு' ஓடைக்கு நடுவுல ஒரு தடுப்பணை!
இதை செஞ்சுட்டா, அகழி பாதைகளை 300 ஏரிகளோட இணைச்சு, கொளத்துார், அந்தியூர், பவானி ஊராட்சிகளோட ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், மக்களையும், கால்நடைகளையும் தண்ணீர் பஞ்சத்துல இருந்து நிரந்தரமா காப்பாத்த முடியும். ஆனா, இதுக்கு நீங்க மனசு வைக்கணும். மனசு வைப்பீங்களா தமிழக முதல்வரே?

- தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கேட்கும் கண்ணாமூச்சி கிராமத்தினர், கொளத்துார், சேலம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • vasumathi - Sindhathari Pettai ,இந்தியா

    தினமலர் இதனை உரிய முக்கியம் கொடுத்து உதவி செய்ய வேண்டுகிறோம். உள்ளாட்சி தேர்தல்ல கண்டிஷன் போடுங்க

  • sikkandar.m - fahaheel,குவைத்

    நான் உங்களை பாராட்டுகிறேன்.

  • Darmavan - Chennai,இந்தியா

    இது போல் கடமையை செய்யாத மந்திரிக்கு/அதிகாரிக்கு தண்டனை வேண்டும்.

  • PR Makudeswaran - Madras,இந்தியா

    அய்யா அதற்கு எல்லாம் அரசியல்வாதிகளுக்கு நேரம் எங்கேயா? எதிர்க்கட்சியினரை இல்லாமல் ஆக்க பொய் சொல்ல அடுத்து பதவியை தக்க வைத்துக்கொள்ள அம்மாவின் ஆன்மா அப்படி இப்படி என்று மக்களை ஏமாற்ற

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement