Advertisement

காதலுடன் கண்ணம்மா...

என் கண்மணியே... சமையலறையிலும் நெகிழி தவிர்க்க நமக்கோர் வாய்ப்பு!

சென்னை, மயிலாப்பூரில் இருக்கிறது, 'ஈகோ இந்தியன்' மளிகை கடை; 'ஆர்கானிக்' காய்கறிகளை வாங்கினாலும், நெகிழிகளுக்குள் அடைபட்டு வரும் மளிகை பொருட்களைத் தான் சமையலுக்கு பயன்படுத்தியாக வேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் கடை இது!
கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் துாள், மஞ்சள் துாள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், ஊறுகாய்கள், இட்லி பொடி, நாட்டு சர்க்கரை, செக்கு எண்ணெய், மாப்பிள்ளை சம்பா அவல் மிக்சர், கடலை உருண்டை என, இங்கிருக்கும் எல்லாமும் மண்ணிற்கு கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லாது உருவான பொருட்கள்.
பத்து கிராமோ, 10 மி.லிட்டரோ... தேவைப்படும் அளவில் மட்டும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது இக்கடையின் சிறப்பு.
கையோடு பை, பாட்டில் கொண்டு வந்தால், 5 சதவீத தள்ளுபடி! காட்டன் துணியிலான பைகளும் இங்கு விற்பனைக்கு உண்டு.
மண்ணிற்கு தீங்கு தரா வகையிலான விதைகளுடன் கூடிய காகித பென்சில்கள், மர புகைப்பட சட்டங்கள் உள்ளிட்டவற்றையும் தன் வசம் கொண்டிருக்கிறது இக்கடை.
காதலுடன் கண்ணம்மா.
81240 01177

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement