Advertisement

குறை பிரசவத்தால் குழந்தைக்கு வரும் குறைபாடுகள்!

Share

குறை பிர­ச­வத்­தில் குழந்­தை­கள் பிறப்­ப­தற்கு, குறிப்­பிட்டு ஒரு கார­ணத்தை சொல்ல முடி­ய­வில்லை. மருத்­துவ ரீதி­யில் உறு­தி­யான கார­ணம் தெரிந்­தால், குறை பிர­ச­வத்தை தவிர்த்து விட­லாம்.கர்ப்ப காலத்­தில், தாய்க்கு தொற்று ஏற்­பட்­டாலே, குறை பிர­ச­வத்­தில் குழந்­தை­கள் பிறக்­கும் வாய்ப்­பு­கள் அதி­கம்.




கார­ணங்­கள்
இது­த­விர, வாழ்க்கை முறை மாற்­றம், உடற்­ப­யிற்சி இல்­லா­தது, உண­வுப் பழக்­கம், சுற்­றுச்­சூ­ழல் மாசு, மன அழுத்­தம், சிறு­நீ­ர­கத் தொற்று இப்­படி நிறைய கார­ணங்­கள் உள்ளன.குறை பிர­ச­வத்­தில் பிறக்­கும் குழந்­தை­களின் உடல் உறுப்­பு­ கள் அனைத்­தும், முழு­மை­யாக உரு­வாகி இருந்­தா­லும், முழு வளர்ச்சி பெற்­றி­ருக்­காது. உடல் எடை­யும் குறை­வாக இருக்­கும். நுரை­யீ­ர­லின் செயல்­பாடு, மிக­வும் குறை­வாக இருக்­கும். இத­னால், மூச்­சுத் திண­றல் உட்­பட, சுவாச பிரச்­னை­கள் வரும். குழந்­தை­களின் இறப்­பிற்­கான கார­ணங்­களில் முக்­கி­ய­மா­னது இது.




இரண்­டா­வது, குழந்­தை­யின் செரி­மான மண்­ட­லம், பாலை செரிக்­கும் அள­விற்கு, முழு­மை­யாக வளர்ச்சி பெற்­றி­ருக்­காது. தாய்ப் பாலை உறிஞ்­சு­வது, விழுங்­கு­வது, குழந்­தை­யால் முடி­யாது. அத­னால், பிறந்­த­வு­ட­னேயே, அம்­மா­வி­டம் பால் குடிக்க முடி­யாது. தாயி­டம் இருந்து, பாலை தனியே எடுத்து, குழாயை, நேர­டி­யாக குழந்­தை­யின் வயிற்­றில் இணைத்து, அதன் வழியே ஒரு தட­வைக்கு, 1 மில்லி என, மூன்று மணி நேரத்­திற்கு ஒரு முறை கொடுத்து, ஒரு நாளைக்கு, 25 மில்லி குடிக்­கும் வரை, சிறிது சிறி­தாக தர வேண்­டி­ய­தி­ருக்­கும். வலுக்­கட்­டா­ய­மாக ஒரே நேரத்­தில் பாலை புகட்­டி­னால், வயிற்­றில் தொற்று ஏற்­பட வாய்ப்பு உள்­ளது.கடைசி, 12 வார கர்ப்­பத்­தில் தான், அம்­மா­வி­டம் இருந்து குழந்­தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்­கும். குழந்தை குறை பிர­ச­வத்­தில் பிறந்­தால், இது குறை­வாக இருக்­கும். தொற்று ஏற்­படும் போது, அதை எதிர்த்து போரா­டும் வலிமை, குழந்­தை­யி­டம் இருக்­காது என்­ப­தால், முழு­மை­யாக, 'ஆன்­டி­ப­யா­டிக்' மருந்­து­க­ளையே சார்ந்து இருக்க வேண்டி வர­லாம்; நோய் எதிர்ப்பு சக்தி குறை­வால், இறக்­க­வும் நேரி­ட­லாம்.

பார்வை இழப்பு
மூளை­யில் உள்ள ரத்த நாளங்­கள், மென்­மை­யாக இருக்­கும் என்­ப­தால், ரத்­தக் கசிவு ஏற்­பட வாய்ப்பு உண்டு. 34 வாரங்­க­ளுக்கு முன், 2 கிலோ­விற்­கும் குறைந்த எடை­யில் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு, பார்வை குறை­பாடு அல்­லது பார்வை இழப்பு ஏற்­பட வாய்ப்பு உண்டு. எனவே, விழித்­திரை எனப்­படும், 'ரெடினா'வில் உள்ள ரத்த நாளங்­களின் வளர்ச்­சியை, அவ்­வப்­போது பரி­சோ­திக்க வேண்­டும். அசா­தா­ரண வளர்ச்சி இருந்­தால், ஆரம்­பத்­தி­லேயே. 'லேசர்' சிகிச்சை செய்து, கண் பார்­வையை பாது­காக்­க­லாம்.காது நரம்­பு­கள், சரி­யாக வள­ரா­மல் இருக்­க­வும் வாய்ப்பு உள்­ளது. பிரச்னை இல்­லா­விட்­டா­லும், நான்கு ஆண்­டு­கள் வரை, குறிப்­பிட்ட இடை­வெ­ளி­யில், குழந்­தை­கள் நல மருத்­து­வ­ரி­டம் பரி­சோ­தித்­துக் கொள்­வது பாது­காப்­பா­னது.


கற்­ற­லில், நடத்­தை­யில் குறை­பா­டு­கள் இருக்­க­வும் வாய்ப்­பு­கள் அதி­கம்.குறை பிர­ச­வத்தை, 100 சத­வீ­தம் முன்­கூட்­டியே
தெரிந்து கொள்ள முடி­யாது. 24 - 37 வாரங்­களில், எப்­போது வேண்­டு­மா­னா­லும் இது நடக்­க­லாம்.முதல் குழந்தை குறை பிர­ச­வத்­தில் பிறந்­தால், அடுத்த குழந்­தை­யும் அப்­படி பிறக்க வாய்ப்பு உள்­ளது. 37 வாரங்­க­ளுக்கு முன், வயிற்­றில் வலி வந்­தால், பிர­சவ வலி­யாக இருக்க வாய்ப்பு உள்­ள­தால், சாதா­ரண வலி என்று நினைக்­கா­மல், பரி­சோ­திப்­பது நல்­லது.குறை பிர­ச­வத்­தால் ஏற்­படும் குறை­பாட்டை தவிர்க்க, தற்­போது, பல நவீன மருத்துவ முறை­கள் உள்ளன; எனவே, பயப்­படத் தேவை­யில்லை.

டாக்­டர் எஸ்.கே.எஸ்.ராம­கி­ருஷ்ணா,


பச்­சி­ளங் குழந்­தை­கள் மருத்­து­வர்,


சேலம்.
96553 19192

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement