Advertisement

தீபத்தின் வகைகள்!

* தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், 'தீப லட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம்
* தீபத்தில் பல வகைகள் உண்டு. அவை: வீட்டின் தரையில், வண்ண பொடிகளால் கோலமிட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம், சித்திர தீபம்
* அடுக்கடுக்கான தீப தட்டுகளில் ஏற்றப்படும் தீபம், மாலா தீபம்
* வீட்டின் வெளிப்புறத்தில், உயர் பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம், ஆகாச தீபம்
* நதி நீரில் மிதக்க விடப்படும் தீபத்திற்கு, ஜல தீபம் என்று பெயர்
* வீட்டின் அனைத்து பகுதியிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுவது, சர்வ தீபம்.
* முன்னோர் நற்கதி அடையும் பொருட்டு, கோவில் கோபுரங்கள் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம், மோட்ச தீபம்
* கார்த்திகை மாதம், பவுர்ணமி அன்று, மாலை வேளையில், சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது, சர்வாலய தீபம்
* மலை உச்சியில், பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது, அகண்ட தீபம்
* லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது, லட்ச தீபம்.

ஜெ.மாணிக்கவாசகம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement