Advertisement

லாபம் தரும் 'ஆமணக்கு'

தமிழகத்தில் ஆமணக்கு ஊடு பயிராகவும், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களில் வரப்பு பயிராகவும் சாகுபடி செய்ய ஏற்றது. தற்போது தனி பயிராகவும் சாகுபடி செய்கின்றனர். இது இறவை பருவமான கார்த்திகை பட்டம் (டிசம்பர்), பங்குனி பட்டம் (மார்ச் - ஏப்ரல்) மற்றும் ஜூன் - ஜூலை ஆடிப்பட்டம் என மானாவாரி பருவத்திற்கு ஏற்றது. ரகங்களாக கோ - 1 (பல்லாண்டு பயிர்), டி.எம்.வி.எஸ், டி.எம்.வி. 6 (120 - 160 நாட்கள்), கலப்பினம் டி.எம்.வி.சி. எச். 1 (160 - 170 நாட்கள்), கலப்பினம் ஒய்.ஆர்.சி.எச்.ஐ. 1 (150 - 160 நாட்கள்) கிடைக்கிறது.

விதை நேர்த்தி
ஆமணக்கு சாகுபடி செய்ய ஆழமான வடிகால் வசதியுடன் கூடிய கார அமில தன்மையற்ற வண்டல் மற்றும் செம்மண் நிலங்கள் ஏற்றது. நீர் தேங்கிய நிலத்தில் பயிர் செய்யக்கூடாது. ஏக்கருக்கு 4 கிலோ விதையும், வீரிய ஒட்டு கலப்பினங்களுக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். மானாவாரி பகுதியில் விதைப்பிற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் பருவமழை தொடங்கும் முன் தெளிக்க வேண்டும். விதைகளை 4-6 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும்.

களை நிர்வாகம்
ஏக்கருக்கு 1.2 லிட்டர் பென்டிமெத்தலின் அல்லது 800 மி.லி., ப்ளுக்குளோரலின் களைக்கொல்லியை விதைத்த 3ம் நாள் களைகள் முளைக்கும் முன்பு தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 5,000 கிலோ மக்கிய தொழு உரம் இட வேண்டும். ஏக்கருக்கு 12 கிலோ சல்பர்-ஐ ஜிப்சம் 66 கிலோ மூலம் இட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட்டும், 10 கிலோ பைரஸ்சல்பேட்டும் இட வேண்டும். பயிர் நன்கு விளைந்து ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம். வெயிலில் காய வைக்க வேண்டும். ரகங்களின் ஏக்கருக்கு 400 - 500 கிலோ வரை கிடைக்கும். கலப்பினங்களில் 800 - 1200 கிலோ வரை கிடைக்கும்.
- முனைவர் ம.சரவணன்
காந்திகிராம கிராமிய பல்கலை
97152 86401

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement