Advertisement

மெருகேற்றிய விதைகள்

'உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது' என்பது பழமொழி. ஆனால் திட்டமிட்டு செயலாற்றினால் எந்த செயலிலும் வெற்றி பெறலாம் என்பது அனுபவமொழி.
விவசாயிகள் விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் வரை பல்வேறு இடுபொருட்களான விதை, உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றிற்காக அதிகளவில் செலவிடுகின்றனர். ஆனால், விதை விதைக்கும் முன்பே விதையிலேயே சில இடு பொருட்களை கொண்டு விதை நேர்த்தி செய்து மெருகேற்றிய விதைகளாக மாற்றி விதைப்பதன் மூலம் இடு பொருட்களுக்கான செலவினை குறைப்பதுடன் அதிக மகசூல் பெறலாம்.
மெருகேற்றிய விதை என்பது விதையின் சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்தல் ஆகும். இதனால் நல்ல சீரான முளைப்புத்திறன், திடமான ஆரோக்கியமான நாற்றுகள், நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன், பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கான இடுபொருள் செலவு குறைவு, நிறைந்த மகசூல் என பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
- சி.சிங்காரலீனா
விதை பரிசோதனை அலுவலர், மதுரை.
94430 05595

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement