Advertisement

நெல்லில் இலை மடக்குப்புழு நோய்

தமிழகத்தில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல்லில் இலை மடக்குப்புழு நோய் தாக்குதல் உள்ளனவா என கண்டறிய வேண்டும்.

நோய் அறிகுறிகள்: தழைச்சத்து கொண்ட உரங்களை இட்டதும் தோன்றும். நிழலான பகுதிகளில் மிகுந்து காணப்படும். தொழு உரம் இடுமுன் குவித்து வைத்த தழைச்சத்து கொண்ட உரங்கள் அதிகம் விழுந்த இடங்களில் முதலில் தோன்றும்.
பொன் மஞ்சள் நிற அந்துகள் வயலினுள் பறந்து இலைகளின் பின்புறம் அமரும். இலைகளில் வெண்ணிறமாக அரித்து சுருட்டி விடும். பயிர் வெளுத்து புகைந்தது போல் காணப்படும். இதனால் வளர்ச்சி பருவத்தில் 10 சதவீதம் இலைகளில் சேதமும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் கண்ணாடி இலை சேதமும் ஏற்படும்.

தடுக்கும் முறைகள்: நோய் தாக்குதலுக்கு பின் கட்டுப்படுத்த 'புரபினோபாஸ்' ஏக்கருக்கு 400 மில்லி அல்லது 'குளோர்பைரிபாஸ்' ஏக்கருக்கு 500 மில்லி அல்லது 'கார்டாப் ஹைட்ரோகுளோரைடு' 50 எஸ்.பி., ஏக்கருக்கு 400 கிராம் அல்லது 'ப்ளூபென்டிஅமைடு' 20 டபிள்யு.ஜி., ஏக்கருக்கு 100 கிராம் அல்லது 'குளோரான்டிரனிலிப்ரோல்' 18.5 எஸ்.சி., ஏக்கருக்கு 60 மில்லி மருந்தினை பயிர் முழுவதும் படும்படியாக மாலை நேரம் தெளிக்க வேண்டும்.
மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட், இன்டரான், பைட்டோவெட், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தலாம்.
- முனைவர் ரா. விமலா
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement