Advertisement

மாண்புமிகு மாணவி!

Share

'பரதம், சங்கீதம் அறிந்தவர்; படிப்பில் முதல் மாணவி' என்பதை விட, 'தேசிய அளவில் ஜொலிக்கும் தமிழக நீச்சல் வீராங்கனை' எனும் அடையாளத்தையே பெருமையாக நினைக்கிறார், க.த.தமிழ் முல்லை; சென்னை கிண்டி செல்லம்மாள் கல்லுாரியின் தமிழ் துறை இளநிலை மாணவியான இவர், நீச்சலில் சிறந்த பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கர்.

'நீச்சல் பழக்கம் உடல் பருமன் ஆகாம பார்த்துக்கும்'ங்கிறது அப்பாவோட அறிவுரை; இரண்டரை வயசுலேயே நீச்சல் குளத்துல இறங்கிட்டேன். 12 வயசுல, மாநில அளவில் முதல் தங்கம். அப்போ கிடைச்ச சந்தோஷம், மனசுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'இந்த சந்தோஷம் வாழ்க்கை முழுக்க கூட இருக்கணும்'னு அப்போ முடிவு பண்ணினேன். இன்னைக்கு, நுாற்றுக்கணக்கான பதக்கங்கள் என் வசம்!

ஒரு அம்மா நல்ல வழிகாட்டியா இருந்தா பிள்ளைகளால பெரிய அளவுல சாதிக்க முடியும். என்னோட அதிகாலை பயிற்சிக்காக, எனக்கு முன்னாடி எழுந்து அம்மா வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. என் பள்ளி நாட்கள்ல இருந்து இப்போவரைக்கும் அம்மா இப்படித்தான்! முக்கியமா, 'டிவி'க்கு எங்க அம்மா அடிமையாகலை; என் வெற்றி மொத்தமும் அவங்களோடது!

எங்கள் தமிழ் முல்லை
'முழு அர்ப்பணிப்பு வெற்றி தரும்'ங்கிற சூத்திரம் தெரிஞ்ச பொண்ணு எங்க தமிழ் முல்லை!
- மு.ராஜகுமாரி, உடற்கல்வி இயக்குனர்.

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement