Advertisement

பறக்கும்' ஜாகுவார்

நெடுஞ்சாலைகளில் மின்னல் வேகத்தில் 'பறக்க' விரும்புபவர்களுக்கான ஜாகுவார் எப்--பேஸ் எஸ்விஆர் காருக்கு முன்பதிவு துவங்கி உள்ளது. இதன் சக்திவாய்ந்த 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 இன்ஜின் அதிகபட்சமாக 543 பிஎச்பி பவரையும், 680 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. 0-100 கி.மீ., வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டும். மணிக்கு 283 கி.மீ., வேகத்தில் செல்லும்.

சக்கரங்களில் 395 மி.மீ., விட்டமுடைய டிஸ்க்குகள் அடங்கிய வலிமையான பிரேக்கிங் சிஸ்டம், மாற்றி அமைக்கப்பட்ட பம்பர், சைலன்சர் சத்தத்தை கட்டுப்படுத்த 'ஆக்டிவ் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம்', 21 இன்ச் போர்ஜ்டு அலாய் வீல்கள், 5 சீட்டர், டச் புரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை சிறப்பம்சம்.

சமீபத்தில் 'ஜாகுவார் இந்தியா' நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் இந்த சொகுசு எஸ்யூவி கார் சேர்க்கப்பட்டது. சில டீலர்கள் முன்பதிவை துவங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விற்பனைக்கு வரலாம். எதிர்பார்க்கப்படும் விலை ரூ.1 கோடி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஹென்றி போர்ட் -

    இந்த ஸ்பெசிபிகேசன் நமது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெரியுமா? 100க்கு மேலே போனால் வளச்சு வளச்சு பைன் போட்றானுகலாம் NHல். ஓவர் ஸ்பீடுக்கு பைன் அமௌண்டு கூட்டியாச்சுன்னு நியூஸ் கூட வந்துச்சே? இதெல்லாம் இந்த பறக்கும் ஜகுவார் ஒனருக்கும் பொருந்துமா? இல்ல அது எங்கள மாதிரி சொகுசு காருங்குற பேர்ல சோப்புடப்பா வண்டிய வச்சிருக்குற மிடில் கிளாஸுக்கு மட்டும்தானா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement