Advertisement

தேன் சிந்தும் தேவதை

Share

'இதுல இந்தோனேஷியா கொடி எது, மொனாகோ நாட்டு கொடி எதுன்னு சட்டுன்னு சொல்லுங்க!' - சிவப்பு, வெள்ளையில் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாய் இருக்கும் கொடிகளை நம் முன் காட்டி, நம்மை குழப்பி, அழகாய் தன் மழலை மொழியில் அறிவூட்டுகிறாள் வேயாஷினி.

'எது நீளமா, செவ்வகமா இருக்குதோ அதுதான் இந்தோனேஷியா கொடி!' - முத்துப்பல் மிளிர சிரிக்கும் இத்தேவதை, சென்னை - போரூர் 'பர்ஸ்ட் ஸ்கூல்' பள்ளியின், யு.கே.ஜி., மாணவி.
'சீக்கிரம்... 2:00 மணிக்குள்ளே பேச வேண்டியதை பேசிடுங்க; அப்புறம் நான் துாங்கிடுவேன்!' - பரபரத்தாள்.

ஏன்ம்மா?
மதிய சாப்பாட்டுக்கு அப்புறம் துாங்கினா, மூளை நல்லா வேலை செய்யும்னு அம்மா சொல்லியிருக்காங்க; சாயங்காலம், செஸ் மாஸ்டர் வந்திடுவாரு; அப்புறம், உங்களுக்குத் தான் லேட் ஆகும்!

ஓ... உங்களுக்கு செஸ் எல்லாம் விளையாடத் தெரியுமா?
ஆமா... பரதநாட்டியம் கூட ஆடுவேன்!

அம்மாடி... வேற என்னென்ன தெரியும்?
ம்ம்ம்... பொய் சொல்லக்கூடாதுன்னு தெரியும்; செஞ்ச தப்பை ஒத்துக்க தெரியும்; பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியும்... அவ்வளவு தான்!

ஐந்து வயதை நெருங்கும் வேயாஷினி, ஆசிய - ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களை, 170 வினாடிகளில் சொல்லி, இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கும் சாதனையாளர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement