Advertisement

மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்

மழைக்கால சாகுபடிக்கு உகந்த நெல் ரகம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் மற்றும் வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் டி. செல்வராஜ் கூறியதாவது:காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், சம்பா மற்றும் பின் சம்பாவில் பயிரிடப்படும் பெரும்பாலான விவசாயிகளின் நெற்கதிர்கள், நீரில் மூழ்கி விடுகின்றன.இதை தவிர்க்க, வைகை அணை ஆராய்ச்சி நிலையத்தால், வி.ஜி.டி., - 1 என்ற நடுத்தர குட்டை ரகம் நெல், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்த ரக நெல்லை, 130 நாட்களில் அறுவடை செய்யலாம். மழைக்காலத்தில், மகசூலின் போது, நெற்கதிர் செங்குத்தாக இருக்கும்; வயலில் சாயாது. இலை சுருட்டு பூச்சி, குலைநோய், இலைப்புள்ளி நோய்களை எதிர்க்கும்.மேலும், பிரியாணி மற்றும் குஸ்கா உணவுக்கு ஏற்ற நெல். இந்த ரக நெல், 1 ஏக்கருக்கு, 2,340 கிலோ மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 80561 68810

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement