Advertisement

கப்பல் படையில் 2,700 பணி

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கப்பல்படையில் 2,700 இடங்களை நிரப்பவதற்கு, திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:
கப்பல்படையில் செய்லர் பதவிக்கான ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் (ஏஏ) பிரிவில் 500, சீனியர் செகண்டரி ரெக்ரூட்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.,) பிரிவில் 2,200 என மொத்தம் 2,700 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏ.ஏ., பதவிக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்துடன் வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பாடத்துடன் பிளஸ் 2 படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர்., பதவிக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரர்கள் 1.8.2000 முதல் 31.7.2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: இரு பதவிகளுக்கும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ. 215 (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

கடைசி நாள் : 18.11.2019

விபரங்களுக்கு
: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_23_1920b.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement