Advertisement

சயோமியின் முதல் ஸ்மார்ட் வாட்ச்

சயோமி நிறுவனம், தன்னுடைய முதல் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை, பீஜிங்கில் அறிமுகம் செய்துள்ளது. 'மி வாட்ச்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், கிட்டத்தட்ட, ஆப்பிள் வாட்ச் போலவே உள்ளது.
மேலும், 1.78 அங்குல அமோல்டு திரையுடன், அலுமினியம் அலாய் பிரேமுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 44 மி.மீ., டயல் கொண்டதாக இருக்கிறது.
ரப்பர் ஸ்ட்ராப்புடன் வந்திருக்கும் இந்த வாட்ச், பிரீமியம் பிரிவில், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலிலும் கிடைக்கிறது.
விலையை பொறுத்தவரை, சாதாரண வாட்ச், 13 ஆயிரம் ரூபாயும், பிரீமியம் வாட்ச், 20 ஆயிரம் ரூபாயும் ஆகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement