Advertisement

வருகிறது நோக்கியா டிவி

பிளிப்கார்ட் நிறுவனம், மோட்டோரோலாவை அடுத்து, நோக்கியாவுடன் இணைந்து, 'ஸ்மார்ட் டிவி'யை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.
பிளிப்கார்ட் நிறுவனம், இந்திய சந்தையில், நோக்கியா பிராண்டு பெயரில், 'ஸ்மார்ட் டிவி'யை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த இரு நிறுவனங்களும், 'டிவி'யின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப தகவல்கள், அறிமுக தேதி என எதைப் பற்றியும் இன்னும் அறிவிக்கவில்லை.
அடுத்து அறிமுகமாக இருக்கும் 'நோக்கியா ஸ்மார்ட் டிவி' ஆடியோ தரத்துக்காக, ஜே.பி.எல்., நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக, பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும், 'ஸ்மார்ட் டிவி'யையும் அறிமுகம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.
சாம்சங், மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், சயோமி, மோட்டோரோலா, ஒன்பிளஸ் என பல நிறுவனங்கள், 'ஸ்மார்ட் 'டிவி'களை அறிமுகம் செய்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதத்தில், மோட்டோரோலா, 32 அங்குலம் முதல், 65 அங்குலம் வரையிலான, 'ஸ்மார்ட் டிவி'களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை, 14 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.
ஏற்கனவே பிளிப்கார்ட், மார்க் எனும் பெயரில், 'ஸ்மார்ட் டிவி'யை விற்பனை செய்து வருகிறது. 24 அங்குலம் முதல், 65 அங்குலம் வரையிலான இந்த, 'டிவி'களின் விலை, 7 ஆயிரத்திலிருந்து, 65 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement