Advertisement

புஜிபிலிமின் புதிய இன்ஸ்டன்ட் கேமரா

புஜிபிலிம் நிறுவனம் அண்மையில் புதிய, 'இன்ஸ்டாக்ஸ் லிபிளே' கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு இன்ஸ்டன்ட் கேமராவாகும். கிளிக் செய்த அடுத்த நிமிடம் பிரின்ட் கைக்கு வந்துவிடும்.
கிரெடிட் கார்டு அளவில் பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று வண்ணங்களில் இந்த கேமராவை அறிமுகம் செய்துள்ளது, புஜிபிலிம். இந்த இன்ஸ்டாக்ஸ் கேமராவில் உள்ள, எல்.சி.டி., திரை மூலம், போட்டோவை பார்த்துவிட்டு, கேமராவிலிருந்தே பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் சவுண்ட் ரெக்டார்டர் வாய்ப்பும் இருக்கிறது. 10 நொடிகளுக்கு சப்தத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஆடியோ, கியுஆர் கோடு மூலம் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படும். இந்த, கியுஆர் கோடை, ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து கேட்டுக் கொள்ளலாம்.
இந்த கேமராவில், 2.7 அங்குலத்தில் எல்.சி.டி., டிஸ்பிளே உள்ளது.
மேலும், கேமராவில், 6 பில்டர்கள் மூலம் விதவிதமான செட்அப்களில் படம் எடுக்கலாம். மேலும், 10 ரெடி போட்டோ பிரேம்களும் இருக்கின்றன.
'இன்ஸ்டாக்ஸ் மினி லிபிளே' செயலியை இறக்கி, மேலும், 20 வடிவ போட்டோ பிரேம்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல், கேமராவில் எடுத்த போட்டோவை மட்டுமின்றி, ஸ்மார்ட்போனில் இருக்கும் படங்களையும் பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.
விலை:13,799 ரூபாய்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement