Advertisement

பேப்பர் போனுக்கும் மவுசு

கூகுள் அறிமுகம் செய்த, பேப்பர் போனுக்கு மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது.
அண்மையில் கூகுள், பேப்பர் போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் பேச முடியாது, 'வாட்ஸ்ஆப், பேஸ்புக்'குகளில் பதிவிட முடியாது, 'யு டியூப்' பார்க்க முடியாது, பாட்டு கூட கேட்க முடியாது.
பிறகு எதற்கு இந்த போன் என்கிறீர்களா?
முதலில் இது போனே கிடையாது!
எப்போதும் போனே கதி என்று கிடப்பவர்கள், அதிலிருந்து அவ்வப்போது விடுபட, இந்த வாய்ப்பை வழங்கி உள்ளது, கூகுள்.
உங்கள் ஸ்மார்ட்போனில், கூகுள் பிளேவில் பேப்பர் போன் செயலியை இறக்கி கொள்ளவும்.
அதில் உள்ள பக்கத்தில் தேவைப்படும் சில தொலைபேசி எண்கள், மேற்கொள்ள வேண்டிய செயல்கள், சில படங்கள், வரைபடம் போன்றவற்றை இறக்கி பிரின்ட் எடுத்து கையில் வைத்துக் கொண்டால், அதுதான் பேப்பர் போன்.
அத்தியாவசியமாக தேவைப்படும் தகவல்களை மட்டும், பிரின்ட் எடுத்துக் கொண்டு, போனை ஆப் செய்துவிட்டு நிம்மதியாக இருக்க இது உதவும். குறிப்பாக விடுமுறை தினங்களில் பயன்படும்.
இப்போது வார இறுதி நாட்களில் இதை பயன்படுத்தி, போனிலிருந்து விலகி இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிக்ஸல் போனையும் அறிமுகம் செய்கிறது, பேப்பர் போனையும் அறிமுகம் செய்கிறது, கூகுள். பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவது என்பது தான்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement