Advertisement

வானமே எல்லை!

Share

சமையலறைக் கான கரண்டி, குவளை இவற்றோடு மெழுகுவர்த்தி ஸ்டாண்டு, பூ ஜாடி, உண்டியல், பென் ஸ்டாண்டு, நாப்கின் ஹோல்டர், கீ செயின், காதணிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பொருட்களை, தேங்காய் சிரட்டையில் தயாரித்து ஆச்சரியப்படுத்துகிறார், பொள்ளாச்சி - கோகோ இந்தியா புராடெக்ட்ஸின் உரிமையாளரான, 43 வயது மோகனாம்பிகை.

காங்கேயம், பொள்ளாச்சி பகுதிகளின் கொப்பரை தேங்காய்களே இத்தொழிலுக்கான மூலதனம்; கிராமப்புற பெண்களின் கைவேலைப்பாட்டுத் திறனே, இத்தொழிலுக்கான பெரும் பலம்.
'தேங்காய் சிரட்டையில ஐஸ்கிரீம் கப் தயாரிக்கிற கேரள பகுதிக்கு, கொப்பரை தேங்காய்களை அனுப்பிட்டு இருந்தார் என் கணவர். ஒருகட்டத்துல, 'கோகோ' பொருட்களை நாமளே ஏன் தயாரிக்கக் கூடாதுன்னு ஒரு சிந்தனை.
அவரும் சம்மதம் சொல்ல, 20 ஆண்டுகளா ஏற்றுமதி பண்ற அளவுக்கு நடந்துட்டு இருக்கு தொழில்!
'இந்த சிரட்டையை பயன்படுத்தி டைல்ஸ் தயாரிக்கணுங்கிறது பெரும் கனவு; நிச்சயம், 'கோ கோ டைல்ஸ்' என்னால அறிமுகமாகும்!' - தன்னம்பிக்கை மிளிரச் சொல்கிறார் மோகனாம்பிகை.

போன்: 99420 14274

இங்கிருக்கும் சிறப்பு பொருள்: தேங்காய் சிரட்டையில் பளபளக்கும் மேஜை விளக்கு - 1,000 ரூபாய் முதல்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement