Advertisement

பெண்மை என் பெருமை!

புழுதி பறக்கும் போடி நாயக்கனுார் மைதானம். 46 ஆண்டு அனுபவமிக்க மாஸ்டர் நீலமேகத்தின் சிலம்பம், மோதத் துவங்கிய சில நிமிடங்களிலேயே சொக்கர் மீனாவின் சிலம்பத்திடம் சரணடைகிறது. 23 வயது மீனா சிலம்பம் கற்றுக்கொள்ளத் துவங்கியது... மூன்றரை வயதில்!

'மாஸ்டர் நீல மேகம் என் அப்பா!' - பெருமை பொங்க தந்தையை அறிமுகப்படுத்தும் மீனா, சிலம்பத்தில் தேசிய அளவில் தங்கம் வென்றவர்.

தற்காப்பு கலைகள் பெண்களுக்கு அவசியமா மீனா?
பெண்களோட தயக்கத்தையும் பயத்தையும் போக்க தற்காப்பு கலைகள் ரொம்பவே அவசியம். ஒருதடவை, தேசிய அளவிலான குங்பூ போட்டியில கலந்துக்க, என்னை கொடைக்கானலுக்கு கூட்டிட்டு போயிருந்தாங்க;
அப்போ எனக்கு வயசு, 6. எதிராளியை தாக்க நான் தயங்கி நின்னப்போ, என் மேல முதல் அடி விழுந்தது. வலியில அழுதேன்;
ஆனா, அந்த போட்டியில ஜெயிச்சேன். இதுக்கு காரணம், குங்பூ கலை தான்!
தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரைச் சேர்ந்த சொக்கர் மீனா, தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் தேனி மாவட்ட செயலர். கராத்தே, குங்பூ உள்ளிட்டவற்றில், 'பிளாக் பெல்ட்'டில் 5வது கிரேடு பெற்றிருக்கும் இவர், பள்ளி - கல்லுாரி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

மீனாவின் பார்வையில், எது வெற்றி?
கிடைக்கிறது தோல்வின்னாலும், போராடி தோற்றா அதுவும் வெற்றி தான்! நான் பிளஸ் 1 படிக்கிறப்போ, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்கிட்டே பயிற்சி எடுத்துக்கிட்ட ஒரு பெண்ணோட மோத வேண்டிய சூழல். அதுல, நாலாவது சுற்று வரைக்கும் கடுமையா போராடினேன். கிடைச்சது தோல்விதான்னாலும், 'இந்த தமிழக பொண்ணு தன்னை நிரூபிச்சிட்டா'ன்னு எல்லாரும் சொன்னாங்க. வெற்றிக்கான இன்னொரு முகம் அறிமுகமானது அப்போதான்!

சிலம்பம், குங்பூ, கராத்தே, குத்துச்சண்டை... அவ்வளவுதானா?
இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு துாக்கும் போட்டியில ஜெயிச்சு, 'பார்ம் - 3' சான்றிதழ் வாங்கியிருக்கேன். யோகாவும், களரியும் கூட தெரியும்.
தேசிய அளவில் ஐந்து, மாநில - மாவட்ட அளவில் எண்ணற்ற தங்க பதக்கங்கள் என சாதித்திருக்கும் மீனா, படிப்பிலும் கெட்டி. சிலம்பம், குங்பூ, கராத்தே போட்டிகளுக்கான நடுவர் பயிற்சியினை முடித்திருக்கும் இவர், தமிழரின் பாரம்பரிய ஆயுதமான வளரியை கையாளும் பயிற்சியில் தற்போது தீவிரமாய் இருக்கிறார்.

சொக்கர் மீனாவின் புதுப்புது அர்த்தங்கள்
வீரம் - உரம்
காலம் - புதையல்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement