Advertisement

ரவுத்திர வீணை!

தமிழகத்தின் டி.ஜி.பி.,க்கு...
'கம்பீரம்'ங்கிறது காக்கி உடையா; அந்த உடைக்கான கடமையா?
அற்ப ஆயுள்ல சாகுறதுக்காகவே பிறந்திருக்கிற எங்களுக்கு இந்தமாதிரியெல்லாம் சந்தேகம் வரக்கூடாது தான்; ஆனா, என்ன பண்றது; அபினேஷ் மாதிரி பிஞ்சுகள் மாஞ்சா நுால்ல சிக்கி பலியாகுறப்போ, காவல் துறை மேல கோபம் கோபமா வருதே!
'உங்க கோபத்தை வைச்சு எங்களை என்ன பண்ணிட முடியும்?'னு நீங்க நினைக்கிறது புரியுது. உங்க எண்ணம், 100 சதவீதம் சரி. எங்க பலவீனமும் இதுதான்; உங்க பலமும் இதுதான்! எந்நேரமும் கார்ல பாதுகாப்பா போற உங்களுக்கு, இரு சக்கர வாகனத்துல போறவங்களோட பிரச்னைகள் தெரிய வாய்ப்பில்லை!
வீட்டை விட்டு வெளியே போற குடும்ப உறவுகள், மறுபடியும் பத்திரமா வீடு வந்து சேர்ந்திடுவாங்கங்கிற நம்பிக்கையில, பெண்கள் நாங்க வாழ்ந்துட்டு இருக்குறோம்.
மக்கள் உயிரை பறிக்குதுன்னாலும், அதிகாரத்துல இருக்குறவன் வைக்கிற பேனர், கட் அவுட் பத்தி நீங்க கேள்வி கேட்க முடியாது. கேட்டா, உங்க பதவிக்கு பிரச்னை வந்திரும்! சரி...
இந்தமாதிரி 'மாஞ்சா நுால்' பட்டம் விடுறவனையுமா உங்களால கட்டுப்படுத்த முடியாது?
மாஞ்சா நுாலால ஒவ்வொரு உயிர் போற போதும், தனிப்படை புறப்படுற நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு சார்?
- 'மாஞ்சா நுால்' அரக்கனால், தலைநகரத்தில் மனம் கொதித்துக் கிடக்கும் ஒரு தாய்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement