Advertisement

சாதனாவின் சாதனை

பிறப்பு தமிழகத்தில்; வளர்ந்தது மைசூரில்; லண்டனில் மேற்படிப்பு; அங்கேயே, நிறைவான வருமானம் தரும் வங்கிப்பணி!
'ஒரேமாதிரியான வேலையில ரொம்பவே சோர்வா இருந்தது. வேலையை உதறிட்டு இன்வெஸ்டி கேட்டிவ் ஜர்னலிசம் - பிலிம் மேக்கிங் படிப்புல சேர்ந்தேன். இறுதி ஆண்டுல, ஒரு ஆவணப்படம் உருவாக்கி ஆகணும். 'அது ஏன் நம்ம தமிழ் மண் சார்ந்ததா இருக்கக்கூடாது'ன்னு ஒரு எண்ணம். கிளம்பி வந்துட்டேன்!' - 32 வயது சாதனா சுப்பிரமணியம்.
உடுமலைப்பேட்டையில், 2016ம் ஆண்டில் நடந்த ஆணவக்கொலையை தன் திட்டத்தின் களமாக்கினார் சாதனா. முதல் பாதி ஒளிப்பதிவிற்கு தீபக் பகவந்த், அடுத்த பாதிக்கு தோழி ஸ்ரையந்தி; 12 மாதங்கள் கோவையில் தங்கியிருந்து, வழக்கின் தீர்ப்பு வரை ஆவணப்படுத்தினார்.
விட்னஸ்: இண்டியா'ஸ் பார்பிடன் லவ் எனும் அப்படைப்பை, 2018ல் அல் ஜசீரா செய்தி சேனல் ஒளிபரப்பியது.
அதற்குப்பின்...
நியூயார்க் விழாவில்... சமகாலத்திய நிகழ்வுகள், மனித உரிமை மற்றும் சுயசரிதை பிரிவுகளில் மூன்று விருதுகள்; 2019ம் ஆண்டிற்கான குறு ஆவணப் படத்திற்காக, 'சிம்மா' விருது; 'இன்டர்நேஷனல் டாக்குமென்டரி அசோசியேஷன்' விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் உள்ளிட்ட அங்கீகாரங்கள்!
தற்போது, 'டிவி' நிகழ்ச்சிகளுக்கான உலகப்புகழ் 'எம்மி' விருதின் தேர்வு பட்டியலில் இடம்; நவம்பர் 25ம் தேதி விழா.
வாழ்த்துகள் சாதனா!
shanu.s@hotmail.co.uk

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement