Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 57; ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றுகிறோன். மனைவியுடன் தினமும், ஒருமுறையாவது சண்டை போடுவேன்; மன உளைச்சலால் அவதிப்படுவேன். இதை மறக்கும் விதமாக, அமைதியும், மகிழ்ச்சியும் தருகிறது சிறுவர்மலர் இதழ்.
என் மனைவிக்கு எழுத, படிக்க தெரியாது. சிறுவர்மலர் இதழ் பகுதிகளை அவருக்கு படித்து காட்டுவேன். சமையல் பகுதியான, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' படித்து காட்டியதும், செய்முறையை, செயல்முறையாக்குவார். அந்த உணவை சமைப்பார்; சுவைத்து சாப்பிடுவோம்.
மாணவ, மாணவியருக்கு சிறந்த வழிகாட்டியாக, அங்குராசு பகுதி உள்ளது. 'இளஸ்... மனஸ்...' பகுதியும் அப்படித்தான்.
சிறுவர்மலர் இதழ் வரும் நாளில், பொழுது போவதே தெரியாது. படித்து முடித்த பின், பக்கத்து வீட்டு சிறுவனிடம் கொடுத்து விடுவேன்; அவனும் படித்து இன்புறுவதை கண்டு மனம் பூரிக்கும்!
- பி.அசோகன், கடலுார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement