Advertisement

சப்பாத்தி நூடுல்ஸ்!

Share

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 5
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய்துாள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், குடைமிளகாயை நீள வாக்கில் நறுக்கவும். சப்பாத்தியை, ரோல் செய்து, நீள வாக்கில் மெல்லிய நுாடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மிளகாய் துாள் சேர்க்கவும்.
இந்த கலவையில், நறுக்கி, உதிரியாக்கிய சப்பாத்தியை போடவும். தீயை மிதமாக்கி நன்றாக கிளறவும். சப்பாத்தி வெந்தவுடன், உப்பு, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
சுவைமிக்க, 'சப்பாத்தி நுாடுல்ஸ்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
- நா.காயத்ரிதேவி, காரைக்குடி.
தொடர்புக்கு: 94892 78829

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement