Advertisement

பல்லுக்குள் பளிச்...

முதுகெலும்பு உள்ள உயிரினங்களின் பற்கள், கால்ஷியத்தால் ஆனவை. வெண்மை நிறத்தில் கெட்டியாக இருக்கும். அவை, உணவை மென்று தின்ன உதவுகின்றன.
மாமிசம் சாப்பிடும் விலங்குகளுக்கு, பற்கள் கூர்மையாக இருக்கும். வேட்டையாடும் போது, இரையாகும் விலங்கின் மாமிசத்தை கிழிக்க உதவும்; மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும்.
மிருகங்களின் கீழ்தாடையில் உள்ள, ஈறுகளில் பற்களின் வேர் பதிவதால் உறுதியாக இருக்கும். நீண்ட காலத்துக்கு நிலைத்து இருக்கும்.
உணவுமுறைக்கு ஏற்ப, விலங்குகளுக்கு பல் அமைப்பு உள்ளது.
தாவர உண்ணிகளான ஆடு, மாடு போன்றவற்றுக்கு, கடின தாவரங்களை வெட்டி அரைத்து உண்ண ஏற்றவாறு, தாடையின் பின்புற கடவாய் பற்கள் அதிகமாகவும், உறுதியாகவும் அமைந்திருக்கும்.
மாமிச உண்ணிகளான, புலி, சிங்கம் போன்றவை, இறைச்சியை கிழித்து சாப்பிட வசதியாக, கோரைப்பற்கள் அதிகமாகவும் உறுதியாகவும் காணப்படும்.
பாலுாட்டி விலங்குகளுக்கு, மூன்று நிலைகளில் பற்கள் அமைகின்றன. பால் பற்கள், ஆரம்பநிலை பற்கள், வளர்ச்சியடைந்த பற்கள் என்று அவற்றை பிரிக்கலாம்.
குழந்தை பிறந்த ஆறு மாதங்களில், பல் முளைக்க துவங்கும். அதற்கு, பால் பற்கள் என்று பெயர். பின், அவை விழுந்து, உறுதியான பற்கள் முளைக்கும்.
சுறா மீனுக்கு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, பற்கள் விழுந்து, புதிதாக முளைக்கிறது. கொறித்து தின்னும் விலங்குகளான எலி, அணில் போன்றவற்றுக்கு, முகத்தின் கீழ்ப்புற அமைப்பு, பாதுகாப்பு கவசம் போல் காணப்படும். அதில், உறுதியான பற்கள் இருக்கும்.
புதை படிவங்களில் கிடைக்கும் விலங்குகளின் பற்களை ஆராய்ந்து, அவை வாழ்ந்த காலத்தை, தொல் உயிரின ஆய்வாளர்கள் கண்டறிகின்றனர்.
இயற்கை படைப்பின் வினோதங்களை அறியுங்கள் குழந்தைகளே...

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement