Load Image
Advertisement

பேரீச்சை சாகுபடிக்கு மானியம்

பேரீச்சை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர், இமானுவேல் விடுத்த செய்திக்குறிப்பு:
பேரீச்சை, விதைகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் மூலமாக சாகுபடி செய்யலாம். பொதுவாக, ஹெக்டேருக்கு, 175 செடிகள் என்ற விகிதத்தில் நடலாம்.
நல்ல மகசூல் பெற, செயற்கையாக, மகரந்த சேர்க்கை செய்வது அவசியமாகிறது.
பயிர் இழப்பை குறைப்பதற்காக, சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியம் அரசால் வழங்கப்படுகிறது.

நன்றாக பராமரிக்கப்பட்ட சூழலில், சராசரியாக மரம் ஒன்றிற்க்கு, 200 கிலோ முதல், 300 கிலோ வரை விளைச்சல் பெறலாம். பேரீச்சை சாகுபடி பரப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
'உழவன் செயலி' மூலமாகவும், மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அல்லது தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரையும் அணுகலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 044 - 2722 2545



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement