Advertisement

வரகரிசி கஞ்சி!

தேவையான பொருட்கள்:
வரகரிசி - 1 கப்
மோர் - 2 கப்
பாசிப்பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 8
ஓமம் - 1 தேக்கரண்டி
மாங்காய் துருவல் - சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:
சுத்தம் செய்த வரகரிசி, ஓமம், பாசிப்பருப்பை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும்.
கடாயில், எண்ணெய் காய்ந்ததும், பச்சை மிளகாய், துருவிய மாங்காய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும், மசித்த வரகரிசி கலவை, மோர் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான, 'வரகரிசி கஞ்சி' தயார். தேவையான உப்பு சேர்த்து பரிமாறவும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது; செரிமானக் கோளாறுகளை சீராக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது. சிறுவர், சிறுமியர் விரும்புவர்.

- கே.முத்துலட்சுமி, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 98658 84768

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement