Advertisement

பச்சரிசியான பட்டு அரசி!

என், 9ம் வகுப்பு தோழி, பட்டு அரசி. அரிசி மெல்வதை பழக்கமாக வைத்திருந்தாள். வறுத்தோ, ஊற வைத்தோ, சுருக்கு பையில் போட்டு, இடுப்பில் கட்டிக் கொள்வாள். ஆசிரியை வராத நேரத்தில், வாயில் போட்டு மென்றபடி இருப்பாள்.
அவளை, 'மிக்சி, கிரைண்டர்' என, பட்டப் பெயர்களால் அழைத்தோம். பலமுறை எடுத்து கூறியும், அந்த பழக்கத்தை அவளால் விட முடியவில்லை.
அன்று கணக்கு பாடவேளை... ஆசிரியை வராததால், அரிசி மென்று கொண்டிருந்தாள். திடீரென வகுப்புக்குள் நுழைந்த ஆங்கில ஆசிரியை, பட்டு அரசியிடம் கேள்வி கேட்டார். வாயில் போட்டிருந்த அரிசியை, மெல்லவும், துப்பவும் முடியாமல் மாட்டிக் கொண்டாள்.
ஆசிரியை சிரித்தபடி, 'இன்று முதல், நீ பட்டு அரசி இல்லை... பச்சரிசி...' என்றாரே பார்க்கலாம். வகுப்பே சிரித்தது. அரிசி மெல்லும் பழக்கத்துக்கு, அன்றே முடிவு கட்டினாள்.
அவளை பார்க்கும் போதெல்லாம், இந்த சம்பவம் தான், நினைவுக்கு வரும்.
- எஸ்.மீனாட்சி, மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement