Advertisement

தழும்பு தந்த எழுத்து!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார், ஆர்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில், 2008ல், 3ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியர் வேதசெங்கோல், மிகவும் அன்பானவர்; பாடம் நடத்தும் போது கண்டிப்புடன் இருப்பார்.
தினமும் காலையில், கையெழுத்து பயிற்சி நோட்டை, அவரது மேஜையில் வைப்போம். பிற்பகலில் திருத்தி தருவார். நான் கிறுக்கலாக எழுதுவேன். அதனால், என்னை, 'கோழி கிண்டுற கோகிலா' என்று, மாணவியர் கிண்டல் செய்வர்.
கையெழுத்து மிக மோசமாக இருந்ததால், 'இதெல்லாம் ஒரு கையெழுத்தா...' என, திட்டிய ஆசிரியர், பயிற்சி நோட்டை துாக்கி என் மீது வீசினார். மிகவும் அவமானமாக உணர்ந்து அழுதேன்.
அம்மாவிடம், அந்த சம்பவத்தை கூறி, எனக்கு ஆதரவாக பேச, வகுப்புக்கு அழைத்து வந்தேன். ஆசிரியரை சந்தித்ததும், 'கையில நல்லா போடுங்க சார்... எழுத்து திருந்தட்டும்...' என்று கூறிச்சென்றார்.
பின், 'மிகவும் பொறுமையாக பயிற்சி செய்; கூடுதல் பக்கங்கள் எழுதினால், விரைவில் திருந்தும்...' என, அறிவுரை கூறிய ஆசிரியர், என் கையை பிடித்து எழுத பழக்கினார்.
வைராக்கியத்துடன் எழுதி பழகினேன். நாளுக்கு நாள், எழுத்து வடிவம் மாறியது. மிக அழகாக எழுதுவதாக, 4ம் வகுப்பில் பாராட்டு பெற்றேன்.
வேறு பள்ளியில், 10ம் வகுப்பு சேர்ந்த போது, என் கையெழுத்தை புகழ்ந்து பாராட்டினர்.
இப்போது, 12ம் வகுப்பு படிக்கிறேன். திரும்பத் திரும்ப எழுதி பழகியதால், விரலில் ஏற்பட்ட தழும்பு, இன்றும் அழியாமல் உள்ளது. அதை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியரை நினைத்து, நன்றி பெருக்கால் கண்ணீர் வடிக்கிறேன்.
- எஸ்.கோகிலாராணி, சிவகங்கை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement