Advertisement

உதவியால் வரும் மகிழ்ச்சி!

கடலுார் மாவட்டம், சோழவரம், நடராஜர் உயர்நிலைப் பள்ளியில், 2002ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தினமும், சீருடை அணிந்து தான் செல்ல வேண்டும். பண்டிகை விடுமுறைக்கு மறுநாள் மட்டும், வண்ண உடை அணியலாம்.
என் வகுப்பு தோழி சங்கீதா, 'வறுமையால், தீபாவளிக்கு புத்தாடை வாங்க முடியவில்லை. அதனால், பண்டிகைக்கு மறுநாள், விடுப்பு எடுக்க போகிறேன்' என்று கூறினாள்.
உடனே, வகுப்பு மாணவியர் ஒன்று கூடி, 'தீபாவளிக்கு மறுநாள், சீருடை தான் அணிய வேண்டும்' என உறுதியேற்று, அப்படியே வந்தோம். நிலைமையை அறிந்த ஆசிரியர்கள், வியந்து பாராட்டினர்.
அந்த கல்வி ஆண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஆசிரியர்களே அவளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்தனர். விடுமுறை முடிந்து வகுப்பே வண்ண உடையில் ஜொலித்தது.
இன்ஜினியரிங் பட்டம் பெற்று, நல்ல வேலையில் இருக்கிறேன். அந்த சம்பவத்தை மனதில் கொண்டு பண்டிகைகளின் போது, ஏழைகளுக்கு மகிழ்ச்சியாக உதவுகிறேன்.
- பிரேமா கார்த்திகேயன், சென்னை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement