Advertisement

மிளகாய் இலை சுருட்டு நோய்

இது ஒரு வைரஸ் கிருமி தாக்குதல் நோயாகும். இந்நோயானது வெள்ளை ஈக்கள் மூலம் வேகமாக பரவும். இலையின் நடுநரம்பில் சுருண்டு, உருமாற ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி குட்டையாக இருக்கும். இலைகளின் அளவு சிறுத்தும், இடைக் கணுக்கள் இடையேயான அளவு குன்றியும் காணப்படும். பூ மொட்டுக்கள் வளர்ச்சி அடையாது. மகரந்த துாள் இல்லாமல் இருக்கும்.

கட்டுப்பாடு: ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடக்கூடாது. நோயற்ற விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 2-3 வரிசை மக்காச்சோளம் அல்லது சோளத்தை வரப்பு பயிராக பயிரிட வேண்டும். டைமெத்தோயேட் 2 மில்லி அல்லது அசிப்பேட் 1 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். தாக்கப்பட்ட நச்சுயிரி செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிக பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்ர்த்து கலக்கி கொண்டு பயன்படுத்தலாம்.

- பேராசிரியை இரா. விமலா
பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement