Advertisement

வானமே எல்லை!

சென்னை - கிழக்கு கடற்கரை சாலை. '700 வகையான மரங்களும், விதவிதமான செடிகளும் இருக்குற, 1.75 ஏக்கர் நர்சரி கார்டன் இது!' - 27 வயது நஸ்ரின் பேகம்.

'நுாறு சதுர அடி இடமும், 1,000 ரூபாய் பணமும் போதும்; மாடி, பால்கனியில காய்கறிகள், கீரைகள், மலர்கள்னு பிரமாதமா தோட்டம் போட்டுரலாம்!' எனச் சொல்லும் நஸ்ரின், இக்ஸோரா, ரோஜா, நந்தியாவெட்டை மலர்ச்செடிகளால் 'பட்டர்பிளை கார்டன்' அமைத்து தருகிறார்; கட்டட வெளிப்புற சுவரில், 'வெர்ட்டிகல் வால்கார்டன்' அமைப்பதை, தன் அடையாளமாகச் சொல்கிறார்.

'நறுமணச் செடிகள், வாஸ்து செடிகள், பிரண்டை, துளசி, போன்சாய், பிரத்யேக மண் கலவை, இயற்கை உரங்கள், தோட்ட பராமரிப்பு உபகரணங்கள்னு எல்லாமே இங்கே இருக்கு. நீரூற்று, பூங்கான்னு இட வசதிக்கேற்ப சூழலை பசுமையாக்கித் தர்ற எங்க நர்சரி கார்டனுக்கு, தமிழகம் முழுக்க கிளைகள் பரப்பணுங்கிறது தான் அடுத்த இலக்கு' என்கிறார் நஸ்ரின்.

இங்கிருக்கும் சிறப்பு தாவரங்கள்
அறை காற்றின் நுண்ணுயிர் நீக்கி ஆக்ஸிஜன் பரப்பும் சிங்கோனியம், அந்துரியம், பீஸ்லில்லி செடிகள்; ஆரம்ப விலை 60 ரூபாய்.

சென்னை பிளான்ட் நர்சரி, கானாத்துார், 73972 26937

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement