Advertisement

முதல்வர் பேசுகிறேன்

'குஜராத் பெண்ணா இருந்தாலும், பிழையில்லாம தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன்!' - மனதிருப்தியோடு பேசும் திப்தி, மதுரை - கேட்டி வில்காக்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர்.
கோவை - கிகானி பள்ளியில கல்விப்பணியை துவக்கி, மதுரை - திருப்பாலை ஜெயின் வித்யாலயா அனுபவத்தோட, 2018ல இருந்து இப்பள்ளியில இயங்குறேன்.

நான் வந்தபின்...
'ரேங்க்' - ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மன அழுத்தம் தர்ற இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுங்கிறது தான் என் கொள்கை. மாணவர்கள் எதையும் புரிஞ்சு படிக்கிற அளவுக்கு பயிற்றுவிக்கணும்ங்கிறது என் அறிவுரை. விழா நேரங்கள்ல, 'மரக்கன்று' பரிமாறிக்கிற அளவுக்கு, என் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வை நான் தந்திருக்கேன்.

ஆசிரியர்களுக்கு மத்தியில்...
'இதை செஞ்சாகணும்'னு உத்தரவு போடுற பழக்கம் எனக்கு கிடையாது. ஆனா, 'இதை நாம செய்வோம்'னு சொல்ற மனப்பக்குவம் எனக்குண்டு. 'திப்தி மேடம் எல்லாருக்கும் எல்லா வாய்ப்பையும் கொடுப்பாங்க'ன்னு என்னோட ஆசிரியைகள் இப்போ சொல்றாங்கன்னா... அதுதான், என் பதவிக்கான கவுரவம்.

மாணவச் செல்வங்களிடம்...
'என் மேல தவறு இருந்தாலும், ஆலோசனைப் பெட்டி வழியா நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்' - பள்ளி முதல்வரானதும், மாணவர்களுக்கு நான் விடுத்த முதல் செய்தி இதுதான். இதுவரைக்கும் புகார் வந்ததா என் காதுக்கு வரலை. அதனால, 'நல்லாசிரியர்' விருது வாங்கின திருப்தி.

கொடுத்ததும், பெற்றதும்
இந்த கல்விச்சேவையில, கொடுத்த விஷயங்களை நினைவுல வைச்சுக்க கூடாதுங்கிறதால, என்கிட்டே அந்த பட்டியல் இல்லை. ஆனா, என்னோட மாணவர்களுக்கு போட்டி ஆர்வத்தையும், வெற்றி தாகத்தையும் உருவாக்கின திருப்தி எனக்குண்டு.

கம்பீர கனவுகள்
எல்லாருக்கும் பொதுவா இருக்கிற இயற்கை மாதிரி, கல்வியும் எல்லாருக்கும் பொதுவானதா இருக்கணும். அது, எல்லாருக்கும் இலவசமா கிடைக்கணும்ங்கிற பெரும் கனவு எனக்கிருக்கு.

என் எதிர்காலம்
இந்தியா முழுக்க பயணம் செய்யணும். ஏழை குழந்தைகளுக்கு போதிக்க, பல்லாயிரம் ஆசிரியர்களை உருவாக்கணும். குறிப்பா, மலைவாழ் மக்களுக்கு கல்வி புகட்டணும்னு ஒரு திட்டம் இருக்கு.

என் நாட்டின் எதிர்காலம்
'இளம் பருவ தற்கொலை' - ஆசிரியர்கள் நினைச்சா இதை ஒழிக்கலாம். இந்தியாவோட எதிர்காலம்... ஆசிரியர்கள் கையில தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement